பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு

பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்

Published On :

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, ``சீக்ரெட் ஓனர் பிரதமர் மோடிஜி அவர்களே. உங்கள் பெயரைச் சொல்ல எங்களுக்கு பயம் என்று சொல்கிறார்கள். மத்தியில் ஆள்பவர்கள் என்று முன்னரே நேரடியாக சொல்லி விட்டோம். தமிழ்நாடு தமிழர்களைக் கண்டு ஏன் அலர்ஜி?

ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக் கொள்கிறார்கள்; ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. குழந்தைகளின் கல்விக்கும் நிதி ஒதுக்குவதில்லை; ஆனால், மும்மொழிக் கொள்கையை திணிக்கிறார்கள். பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாப்பது எங்கள் உரிமை; கடமை. திமுக, வாக்குகளுக்காக காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி; கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக அரசியல் கூட்டணி. தமிழ்நாடு இதுவரையில் கண்டிராத ஒரு தேர்தலை அடுத்தாண்டு சந்திக்கும். தவெக - திமுக இடையில் மட்டும்தான் போட்டி’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.