கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

News image
Updated On :3 மே 2025, 4:53 am

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு சென்னை வந்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் சைவ சித்தாந்த மாநாட்டில் ஜெ.பி. நட்டா பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.