சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே அடிப்படை! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா படம் | செய்தி மக்கள் தொடர்புத் துறை
Published on
Updated on
1 min read

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே அடிப்படை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் ஆகியவற்றின் சார்பில் ‘மாநில சுயாட்சி நாயகருக்கு பாராட்டு விழா’ சென்னையில் இன்று(மே 3) நடைபெற்றது. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி. மாநில சுயாட்சி நாயகர்கள் யாரென்றால், அது நான் இல்லை; தமிழ்நாட்டு மக்கள்தான். திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்.” 

“மத்திய அரசின் ஒரு ஏஜென்ட்டாக இருக்கும் ஆளுநர், திட்டங்களைத் தடுக்க முடியுமென்றால் மக்கள் செலுத்தும் வாக்குக்கு என்ன மரியாதை? ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.”

“திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. பகுத்தறிவுக்கான எதிரான மூட நம்பிக்கைகளை பரப்பும் இடமாக கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது. மூட நம்பிக்கைகளை பரப்பும் செயலில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

“எல்லாவற்றுக்கும் கல்விதான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. மாணவர்கள் ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். படிக்காமலே பெரிய ஆள் ஆகிடலாம் என விதவிதமாக ஏமாற்றுவார்கள்.

யூடியூப்பில் சம்பாதிக்கலாம், இன்ஸ்டாகிராமில் அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், கல்வியே அனைத்திற்கும் அடிப்படை விஷயம். அதனை மறந்துவிடாதீர்கள். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com