மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு புதிய சலுகைகள்.

கோப்புப்படம்

Updated On :

தமிழகத்தில் 60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணியை 9 மாதங்களில் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையில் உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர், பிறந்த தேதி, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண் உள்ளிட்ட விவரங்களுடன் க்யூஆர் கோடும்(QR CODE) இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முதல் கட்டமாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2ம் கட்டமாகவும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு, ஏசி பேருந்துகளைத் தவிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்புப் பொருள்களைக் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும்போது 5% தள்ளுபடி, இணைய சேவை மையங்களில் 10% தள்ளுபடி, கடன் உதவி திட்டங்களில் முன்னுரிமை உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.