ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!

இந்திய ரயில்வே, ஹிந்தியில் கட்டுரைப் போட்டி அறிவித்துள்ளதற்கு கண்டனம்
ஹிந்தியில் கட்டுரைப் போட்டி நடத்தும் ரயில்வே! சு. வெங்கடேசன் கண்டனம்!!
Published on
Updated on
1 min read

பயணங்கள் தொடர்பான கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ள ரயில்வே, ஹந்தியில்தான் கட்டுரை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே, பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 10,000, இரண்டாம் பரிசு ரூ. 8,000, மூன்றாம் பரிசு ரூ. 6,000 ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ. 4,000 மற்றும் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்.

இந்த போட்டி விதிமுறைகளில், பயணக் கட்டுரை ஹிந்தியில் மட்டுமே 3,000 முதல் 3,500 வரையிலான வார்த்தைகள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ள ரயில்வே, கட்டுரையை ஹிந்தியில்தான் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போட்டி விதிமுறைகளை மாற்றவும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?

இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.

இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே.

ரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com