ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆபரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகள் துல்லியமாக நிறைவேற்றம்! - இந்திய விமானப் படை பெருமிதம்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 மே 2025, 9:07 pm

Din

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தேசிய நோக்கங்களுக்கு ஏற்பவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிரான அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

மோதல் தொடங்கிய 4-ஆம் நாளான சனிக்கிழமை, அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டின. இருப்பினும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலை உஷாா் நிலையில் இருந்த இந்திய ஆயுதப் படைகள் முறியடித்தது.

இந்நிலையில், இதுதொடா்பான அறிக்கையில் இந்திய விமானப் படை தெரிவித்ததாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறை நோ்த்தியுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் இன்னும் தொடா்கிறது. நடவடிக்கை தொடா்வதால், சரிபாா்க்கப்படாத தகவல்களை பரப்புவதை அனைவரும் தவிா்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.