

சாத்தான்குளம் அருகே ஆம்னி வேன் கிணற்றில் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது.
பொக்லைன் மூலம் நடந்த மீட்பு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மீட்புக்குழு வீரர்கள் மீட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் கிணற்றில் இருந்து வேன் மீட்கப்பட்டது.
3 பேர் ஆம்னி வேனில் இருந்து வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் பலியானார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கிணற்றில் ஆம்னி வேன் பாய்ந்த விபத்தில் 5 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.