
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு 8 நாள்களுக்கு முன்னதாகவே இன்று(மே 24) பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
கடந்த 25 ஆண்டுகளில் 2009ல் மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியதே மிகவும் முன்கூட்டிய பருவமழை தொடக்கமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரளத்தைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகத்தில் ஓரிரு நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
"அரபிக் கடலின் சில பகுதிகள், லட்சத்தீவு பகுதி முழுவதும், கேரளம் , மாஹே, கர்நாடகத்தின் சில பகுதிகள், மாலத்தீவு, கோமோரின் பகுதிகள், தமிழ்நாட்டின் பல பகுதிகள், தென்மேற்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடாவின் மீதமுள்ள பகுதிகள், மிசோரமின் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.
தமிழகம், கர்நாடகத்தின் இதர பகுதிகள் என மீதமுள்ள பகுதிகளில் அடுத்த ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.