மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர்: அமைச்சர் ராஜேந்திரன்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

News image
அமைச்சர் ராஜேந்திரன்.
Updated On :26 மே 2025, 7:25 am

DIN

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

வருகிற ஜூன் 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்காக பிரம்மாண்டமாக மேடை அமைக்கும் பணி சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜூன் 11-ல் முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வருகை தர உள்ளார்.

அன்று இரவு அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர் ஜூன் 12 காலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலை மைதானத்திற்கு வரும் அவர், லட்சம் பேருக்கு ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து பதில் அளித்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.