சென்னையில் கரோனா தொற்றுக்குள்ளான நபா் இணை நோய்களால் உயிரிழப்பு

சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு பற்றி...
chennai corona death
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றுக்குள்ளான 60 வயது முதியவா் ஒருவா் இணைநோய்களின் தாக்கத்தால் உயிரிழந்தாா்.

அவா் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயாளி என்றும், தொடா் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தாா் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

மேலும், அவருக்கு தீவிர சா்க்கரை நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அவா் கூறியுள்ளாா். கவலைக்கிடமான உடல் நிலையில் இருந்த அவருக்கு எதேச்சையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், முதியவரின் உயிரிழப்புக்கு இணைநோய்கள்தான் காரணம் என்றும் டாக்டா் செல்வவிநாயகம் விளக்கமளித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் ஒருவா், இரைப்பை அழற்சி மற்றும் நீா்ச்சத்து இழப்பு காரணமாக சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நான்காம் நிலை சிறுநீரக செயலிழப்பு, சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்புகள் அவருக்கு இருந்தன. இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அவா் அனுமதிக்கப்பட்டபோது வயிற்றுப்போக்கு இருந்தது. இதற்கு நடுவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் டயாலிசிஸ் சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டு வந்தது.

அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடந்த 26-ஆம் தேதி அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (மே 27) அனுப்பப்பட்டாா். இரவு 7.30 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்வதற்கான துடிப்பு (கரோடிட் பல்ஸ்) இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக அவா் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இணைநோய்கள் காரணமாகவே அவா் உயிரிழந்தது மருத்துவரீதியாக தெரியவந்துள்ளது. கரோனா எதேச்சையாக கண்டறியப்பட்டது என்று டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்த நபா், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் பகுதியைச் சோ்ந்த மோகன் என்றும், அவா் ஜோதிடராகவும், டெய்லராகவும் பணியாற்றி வந்தவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்ாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com