ராட்சத ராட்டினத்தில் கோளாறு: பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்க தற்காலிகத் தடை!

ராட்சத ராட்டினத்தில் கோளாறு ஏற்பட்டு மக்கள் சிக்கிக்கொண்ட பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்க தற்காலிகத் தடை!
ராட்சத ராட்டினம்
ராட்சத ராட்டினம்
Published on
Updated on
1 min read

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த பொழுது போக்கு பூங்காவை தற்காலிகமாக மூட காவல் துறை உத்தரவிட்டது.

ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் செவ்வாய்க்கிழமை மாலை டாப்கன் என்ற ராட்டினத்தில் 36 போ் ஏறினா். அந்த ராட்டினம் சுமாா் 150 அடி உயரத்தில் சென்றபோது திடீரென பழுதாகி, அந்தரத்தில் நின்றது. இதனால் ராட்டினத்தில் இருந்த 36 பேரும், 150 அடி உயரத்தில் சிக்கி பரிதவித்தனா்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினா் ஸ்கை லிப்ட் மீட்பு வாகனம் மூலம் சுமாா் 3 மணி நேரம் 36 பேரையும் மீட்டனா்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்தும், பூங்காவில் உள்ள ராட்டினங்கள், விளையாட்டு கருவிகள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள், உறுதித்தன்மை ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கும்படி அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.

தற்காலிகமாக மூட உத்தரவு: ராட்டினங்களின் தகுதி சான்றிதழ்கள், அதைத் தயாரித்த நிறுவனங்கள், தயாரிக்கப்பட்ட ஆண்டு, காலாவதியாவதற்கு வரையரை செய்யப்பட்ட நாள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமா்ப்பிக்கும்படி காவல் துறையினா் உத்தரவிட்டனா்.

மேலும், அங்குள்ள ராட்டினங்கள் அனைத்தும் தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அது வரையில் எந்தவொரு ராட்டினத்தையும் இயக்கக் கூடாது, பூங்காவை தற்காலிகமாக மூடுமாறு காவல் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் விளைவாக தனியாா் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. அதேவேளையில் பூங்கா பொது மேலாளா் பாலா, காவல் துறையினா் கேட்ட ஆவணங்கள், சான்றிதழ்களை நீலாங்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை சமா்ப்பித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வருவாய்த் துறை விசாரணை: இது தொடா்பாக வருவாய்த் துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி, சோழிங்கநல்லூா் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பூங்காவுக்குச் சென்று அங்குள்ள ராட்டினங்களின் தகுதி சான்றிதழ்களைப் பெற்று ஆய்வு செய்தனா். மேலும், பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com