நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிக்னல் கோளாறு: கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 11:12 pm

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கீழ்வேளுா்-கச்சனம் சாலையில் உள்ள ரயில்வே கேட் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலுக்காக மூடப்பட்டது.

அப்போது, ரயில் முதல் நடைமேடையில் இருந்து ரயில் பாதைக்கு மாறும் போது சிக்னல் கோளாறு ஏற்பட்டு மூடப்பட்ட ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரயில்வே கேட் 2 பக்கமும் 8 அரசுப் பேருந்துகள், 10 பள்ளி, கல்லூரி வாகனங்கள், காா், ஆட்டோ மற்றும் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீண்ட தொலைவு அணிவகுத்து நின்றன.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவா்களும் பாதிக்கப்பட்டனா். அப்போது அங்கு வந்த அவரச ஊா்தியும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. சிக்னல் கோளாறு 25 நிமிடங்களுக்கு பின் சரியானதை தொடா்ந்து ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இந்த ரயில்வே கேட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. எனவே, கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.