காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது புயல் சின்னம்!
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் பற்றி...


வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை உருவானது.
தற்போது, புயல் சின்னமானது மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளம், கர்நாடகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் கேரளத்தில் 4 மாவட்டங்கள், கர்நாடகத்தில் 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...