ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
Photo: IMD

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் வலுப்பெற்றுள்ளது பற்றி...
Published on

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தெற்கு - தென்கிழக்கு திசையில் நகர்ந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 1,020 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

‘மஞ்சள்’ எச்சரிக்கை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன. 8) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜன. 9) திருவாரூா், நாகபட்டினம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய இருப்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Summary

Storm symbol has intensified into a deep depression!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com