
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கெனவே திமுக கூறியபடி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.
இதையடுத்து கமல்ஹாசன், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், மநீம நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.