நவ. 5ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றி...
AIADMK district secretaries meeting on Nov. 5
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற நவ. 3 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் சந்திப்பையடுத்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

தொடர்ந்து செங்கோட்டையன், இபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

AIADMK district secretaries meeting on Nov. 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com