

ராஜேந்திர சோழனாக உதயநிதி மாறுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 75-ஆவது ஆண்டு விழாவில் பேசிய அவர், ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜன் மன்னராக இருந்தபோது அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ராஜராஜன் ஆட்சி காந்தளூர்ச் சாலை வரை இருந்தது. ஆனால் அவரது மகன் ராஜேந்திர சோழன் தாய்லாந்து வரை தன் ஆட்சியை நிறுவிக் காட்டினார். அதேபோல் உதயநிதி ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார்.
என்னுடைய அரசியல் கணக்கு அது. உதயநிதி எதை செய்தாலும் சரியாகச் செய்கிறார். இனி இந்த இயக்கத்திற்கு அழிவில்லை. எனக்கு இந்த இயக்கத்தை தவிர வேறு இயக்கம் தெரியாது.
நானே வியக்கும் அளவுக்கும், சல்யூட் அடிக்கும் அளவுக்கு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பணிகளை ஆற்றுவதைப் பார்க்கும்போது பெருமைப்படுகிறேன். காரணம் அவர் கலைஞரிடம் கற்றவர், பணியாற்றியவர்.
அதேபோல உதயநிதியும் அந்த இடத்துக்கு நிச்சயமாக ஒரு காலத்தில் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.