

தில்லியில் இருக்கக்கூடிய பிக் பாஸுக்கு நம்முடைய பழனிசாமி ஆமாம் சாமி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று(நவ. 10) நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
”நம்முடைய எதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் புதுப்புது உக்திகளோடு நம்மை தாக்குவதற்கு, அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு புதுப்புது முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏவிவிட்டார்கள்.
குற்றப் புலனாய்வுத் துறை மூலம் மிரட்டிப்பார்த்தார்கள். இப்போது சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் என்ற ஆயுதத்தை எடுத்து, திமுகவை இதன் மூலம் அழிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.
இது, வேறு மாநிலத்தில் வேண்டுமானால் எடுபடலாமேதவிர, தமிழகத்தில் ஒருகாலும் எடுபடாது. திமுக எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில் அதிமுகவும் தங்களை இணைத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு கிடையாது.
தில்லியில் இருக்கக்கூடிய பிக் பாஸுக்கு நம்முடைய பழனிசாமி ஆமாம் சாமி போட்டுத்தான் ஆக வேண்டும். இதையெல்லாம் மக்கல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.