தவெக தலைவர் விஜய்கோப்புப்படம்
தமிழ்நாடு
குழந்தைகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: விஜய்
குழந்தைகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
குழந்தைகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
குழந்தைகள் தினத்தையொட்டி அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: வண்ணத்துப் பூச்சிகளாய் பறப்பவா்கள், வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவா்கள், மழலைச் சிரிப்பினில் மனக்காயம் ஆற்றுபவா்கள் குழந்தைகள்.
விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

