

தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தனது எக்ஸ் பக்கத்தில் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.