

பிகாரைப் போன்று 2026-ல் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரிக்கு எஸ்ஐஆர் பயிற்சி முகாமிற்கு வந்துள்ளேன். பிகாரில் ஒற்றுமை வெற்றியைத் தேடித் தந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அங்கு கூட்டணி கட்சிகளையும் வெற்றி பெறச் செய்தோம். கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
பிகாரில் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி அந்தஸ்தத்தையும் இழந்துள்ளது. ஆனால் பிகாரில் ராகுல் காந்தி யாத்திரை சென்ற பாதையில் இருந்த எல்லா தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. மக்கள் அதை ஏற்கவில்லை. காங்கிரஸ் சிறிய கட்சியாக மாறிவிட்டது. ராகுல் காங்கிரஸ் பொறுப்புக்கு வந்த பிறகு 95 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளன.
காங்கிரஸ் ஆரோக்கியமான விஷயத்தை சொல்வதற்கு பதில் எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்கிறது. விஜய்யும் காங்கிரஸ் போன்று எதிர்கின்ற மனப்பக்குவத்தில் உள்ளார். விஜய் எஸ்ஐஆரை எதிர்க்கிறார் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லட்டும். தமிழகம், புதுச்சேரியில் இருந்து குழுவை பிகாருக்கு அனுப்பி விஜய் பார்த்து வரலாம்.
யாரின் வாக்குரிமையாவது அங்கு பறித்துள்ளோமா என்று தெரியவரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.