

தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும்தான் கடும் போட்டி இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"பிகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று நான் நம்பவில்லை. தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எல்லாரும் இணைந்து அதைச் சரியாக செய்யும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்?
தவெக உடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறேன் என்று சொல்கிறார்கள். நாங்கள் இன்னும் எந்த முடிவும் வரவில்லை. சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்சி என்று இப்போது சொல்ல முடியாது. எந்தக் கட்சியையும் நான் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. ஆனால் அமமுக இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. வரும் தேர்தலில் நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆளுங்கட்சி கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் சொல்லும் கருத்தை வைத்துதான் நடுநிலையாக நான் இதைச் சொல்கிறேன். அதற்காக நான் கூட்டணிக்குச் செல்கிறேன் என்று அர்த்தமல்ல. யதார்த்தத்தைச் சொல்கிறேன்" என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.