ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள்! மோடியின் கவனம் ஈர்த்தது!

சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகளைப் பார்த்த பிரதமர் மோடி அவற்றை வாங்கிவருமாறு கூறினார்.

News image

சிறுமிகள் வைத்திருந்த பதாகைகள்

Updated On :19 நவம்பர் 2025, 10:47 am

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வேளாண்மை மாநாட்டில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள் அவரது கவனத்தை ஈர்த்தன.

பிரதமரின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் மாநாட்டில் பள்ளி மாணவிகள் இருவர் பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். இதனை தனது சிறப்புரையின்போது கவனித்த பிரதமர் மோடி மாணவர்களின் கையில் இருந்த பதாகைகளை பெற்று வழங்குமாறு தெரிவித்தது அங்கிருந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

கூட்டத்தினரைப் பார்த்து ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்துக்கு நடுவே, இரண்டு சிறுமிகள் தங்கள் கையில் இரண்டு பதாகைகளை ஏந்தியபடி நின்றிருந்தனர்.

ஒரு பதாகையில், நான் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் போது பட்டதாரி ஆவேன், பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும்போது ஓய்வு பெறுவேன், இதற்காக நன்றி' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பதாகைகளைப் பார்த்த பிரதமர் மோடி, கூட்டத்தில் இரண்டு சிறுமிகள் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். சிறுமிகள் ஏந்தி நின்ற பதாகையில் உள்ள வாசகங்களை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அவற்றை பாதுகாவலர்கள் சிறுமிகளிடமிருந்து பெற்று என்னிடம் கொடுங்கள். பிறகு அந்த சிறுமிகளை நான் சந்தித்துப் பேசுகிறேன் என்று கூறினார்.

மேலும், கண்ணா அதில் என்ன எழுதியிருக்கிறதோ, அதை என் கருத்தில் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள், சிறுமிகளை அழைத்து அவர்களின் விவரங்கள் கேட்டுக் கொண்டு, அவர்கள் கையில் இருந்த பதாகைகளைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.

அப்போது பேசிய மோடி, வெகு நேரமாக கம்பீரமாக இந்த பதாகைகளை ஏந்தியபடி நின்றிருந்தீர்கள். மிகவும் நன்றி என்று கூறினார்.

இந்த மாநாட்டின் தொடக்கத்தில், நாட்டின் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு (பி.எம்.கிஸான்) திட்டத்தின்கீழ் 21-ஆவது தவணையை பிரதமர் விடுவித்தார்.

இன்று காலை, தில்லியிலிருந்து ஆந்திரம் சென்ற பிரதமர் மோடி, புட்டபர்த்தி கோயிலில் தரிசனம் செய்தார். பிறகு நண்பகல் 12.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 1.25 மணிக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு கார் மூலம் கொடிசியா அரங்குக்கு வந்து, மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Summary

Seeing the banners held high by the girls, Prime Minister Modi asked them to buy them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.