ராமேசுவரத்தின் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் காவல் துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17) பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று(நவ.19) காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவியை முனியராஜ் குடி போதையில் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை ராமேசுவரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் முனியராஜை கைது செய்தனர்.
Summary
A drunken youth who stabbed a schoolgirl to death for refusing to fall in love with him has been arrested in Rameswaram!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


