

வருகிற நவ. 25 ஆம் தேதி திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதார சீர்கேட்டால் அவதியுறும் நிலை இருக்கிறது. செயல்படாமல் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும் இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்தும்
வருகிற நவம்பர் 25 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.