

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் மொழித் தொண்டை பாராட்டும் வகையில் அவரின் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றியவர் ஈரோடு தமிழன்பன் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
புகழ்பெற்ற கவிஞரான ஈரோடு தமிழன்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று (நவ. 23) பிரிந்தது.
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு ஆசிரியரான சாந்தகுமாரி என்ற மனைவியும், மருத்துவர் பாப்லோ நெருடா, மருத்துவர் பாரதிதாசன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) காலை 10:30 மணி அளவில் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
இதையும் படிக்க | காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.