

தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி என அவர்கள் பேசுவதில் இருந்து தெரிகிறது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 95 சதவீதம் எஸ்ஐஆா் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தாங்கள் வசிக்கிற பகுதியில் ஓட்டுரிமை பெற்றுத்தர தங்களின் கடமையாக செய்து வருகின்றனர். எதனால் குற்றம்சாற்றுகின்றனர் எனத் தெரியவில்லை. மத்திய எஸ்ஐஆா் சரியாகத்தான் நடைபெற்றுகொண்டு இருக்கிறது.
நல்ல விளைச்சல் இருந்தும் மழை காலத்தில் நெல் அறுவடை பாதிக்கிறது. எனவே, மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நெல் கொள்முதலின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது திமுக கோரிக்கை அல்ல, விவசாயிகள் கோரிக்கை. அதை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மெட்ரோ குறித்து திமுக, பாஜக மாறி மாறி பேசி வருகின்றனர்.
எடப்பாடி நான் ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ கொண்டு வருவேன் என்கிறார் இது கண்டனத்துக்கு உரியது. இது மக்களின் தேவை. கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வேண்டும் என மாநில அரசு கேட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இந்த ஆட்சி வந்தால் கொண்டுவருவோம் என்பது காழ்ப்புணர்ச்சியோடு அணுகுவது போல் உள்ளது. மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வளர்ந்த நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
போதைப் பொருள் பழக்கம் மூலம் கொலை, கொள்ளை அதிகரிப்பதை சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்றால் திமுகவிற்கு தேர்தலில் இது எதிரொலிக்கும். கூட்டணி குறித்து எங்களிடம் பேசிக்கொண்டு உள்ளனர். கூட்டணி அமைந்த பிறகு அதை குறித்து பேசுகிறேன். விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என அப்பாவு கூறியது அவருடைய கருத்து.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி என அவர்கள் பேசுவதில் இருந்து தெரிகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.