

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அம்மாவட்டத்தின் பிரச்னைகளை அடுக்கடுக்காக முன்வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (நவ., 23) நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டு காஞ்சிபுரத்தின் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.
விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அரசு கைவிட்டுவிட்டது. காஞ்சிபுரத்தில் பட்டு தயாரித்துக்கொடுக்கும் நெசவாளர்கள் நிலை மோசமாக இருக்கிறது.
நெசவாளர்களுக்கு ஒருநாள் கூலி 500 ரூபாய்தான். இதனை அதிகரிக்க வலியுறுத்தி பல போராட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை அந்த ஊதியத்துக்கும் வஞ்சகம் செய்துவிட்டது.
காஞ்சிபுரத்தின் பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. இதனை புதுப்பிக்கக்கூட முடியவில்லை. பாலாற்றில் ரூ. 4,730 கோடி மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளனர்.
அரசாங்கத்தால் நல்ல இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் கட்ட முடியாதா? மக்களை பற்றி யோசிப்பதற்கே அவர்களுக்கு (திமுக) நேரம் இல்லை. இதுதான் அவர்களின் பிரச்னை.
வாலாஜாபாத் அருகே அவலூர் ஏரி உள்ளது. அது பாலாற்றை விட உயரமாக உள்ளது. இதனால் ஆற்று நீர் ஏரிக்குச் செல்ல முடியாத நிலை. இதனை சரி செய்தால் பல ஏக்கர் விவசாயம் செழிக்கும். இதனை சரி செய்ய எத்தனை ஆண்டுகள் விவசாயிகள் மனு கொடுக்க வேண்டும்?
பரந்தூர் விமான நிலைய பிரச்னையில் விவசாயிகள் பக்கம்தான் தவெக நிற்கும். காரணங்கள் கூறி திமுக அரசு தப்பிக்க முடியாது.
மக்கள் பிரச்னைகளை பேசுவதால் நம் மீது ஆத்திரம் வரத்தான் செய்யும். சட்டப்பேரவை தொடங்கி சாதாரண நிகழ்ச்சி வரை தவெக மீதான அவதூறுதான். இதற்கு நிச்சயம் பதில் அளிப்போம் என விஜய் பேசினார்.
இதையும் படிக்க | எங்களுக்கு கொள்கையில்லையா? திமுகவின் கொள்கையே கொள்ளைதானே: விஜய் பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.