அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனை விபரம் பற்றிய செய்தி...
நீதிமன்றத்தில் ஆஜராக வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்.
நீதிமன்றத்தில் ஆஜராக வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக்.
Published on
Updated on
2 min read

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம் கொலை வழக்கில் 4ஆவதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயில்தார் சிங் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதா்சனம். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தாா். கடந்த 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 போ், சுதா்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களைத் தாக்கி, 62 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

தமது கட்சி எம்எல்ஏ கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, கொள்ளையா்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டாா். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, அடுத்த மாதத்திலேயே கொள்ளையா்கள் யாா் எனக் கண்டுபிடித்தது. முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1-ஆம் தேதி கைது செய்தது. தொடா்ந்து துப்பு துலக்கி மாா்ச் மாதத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பவாரியா கொள்ளையா்கள் கைது செய்யப்பட்டனா். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவா் வடமாநிலத்தில் என்கவுன்ட்டா் செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் 32 போ் மீது தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரா் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ஜாமீன் பெற்ற 3 பெண்கள் தலைமறைவாகிவிட்டனா். கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் உள்பட இருவா் சிறையிலேயே இறந்துவிட்டனா். மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தாா் சிங் ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தாா்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

வழக்கில், 86 போ் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனா். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட 4 பேருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மூவருக்கான தண்டனை விவரம் நவ.24ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் சுதர்சனம் வழக்கில் ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் எனவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Summary

The Chennai Additional Sessions Court has sentenced to life imprisonment three members of the Bawaria robbery gang in the AIADMK MLA murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com