

கடந்த 24 மணி நேர முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஊத்து, நாலுமுக்கில் அதி கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் பல இடங்களில் மழை நீடித்தது.
தொடர் மழையால் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக ஊத்தில் 232 மி.மீ, நாலுமுக்கில் 220 மி.மீ, சேத்தியாதோப்பில் 210 மி.மீ, காக்காச்சியில் 210 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மாஞ்சோலை, நாகப்பட்டினம், ஒரத்தநாடு பகுதிகளில் மிக கனமழை பதிவானது குறிப்பிரத்தக்கது.
இதையும் படிக்க: சிபிஐ விசாரணைக்கு தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.