தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், இடைக்கால் கிராமம், திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் பேருந்தின் முன்பாகம் முழுவதும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து காயமடைந்த அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அப்பகுதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் பேசியிருந்தார்.
இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முதல்வர் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம். இடைக்கால் கிராமம், திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (24.11.2025) காலை சுமார் 11 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள் பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 56 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.
அவர்களது இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

summary
Tenkasi bus accident: M.K. Stalin announces financial assistance
இதையும் படிக்க | தென்காசியில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து! 6 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

சீா்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

கோவில்பட்டி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஃபரீதாபாத் தொழிற்சாலை தீ விபத்து சம்பவம்: உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

