

தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக, கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. திடலில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
பல்வேறு வசதிகளுடன் மொத்தம் ரூ. 208.50 கோடி செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று(நவ. 25) திறந்து வைத்தார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கோவையில் செம்மொழிப் பூங்கா: தலைவரும் தந்தையுமான கலைஞர் அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றிவிட்டேன்!
அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி, குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்கா இதோ உங்களின் பார்வைக்கு...” என்று குறிப்பிட்டு விடியோவை இணைத்துள்ளார்.
இதையும் படிக்க: அடுத்த படத்தில் நான்தான் பவானிக்கு பவானி: வாட்டர் மெலன் ஸ்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.