

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நுங்கம் பாக்கம் சாலையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கில் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் இது வடமேற்கு பகுதியில் நகர்ந்து, வரும் 30 ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுவை - காரைக்கால் பகுதிகளில், ஆந்திரா பகுதிக்கு அருகே நிலவக்கூடும். இந்த புயலின் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதாவது, தஞ்சாவூர் மாவட்டம், டெல்டா மாவட்டங்கள் மிதமான மழையை பெறும். அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்.
பின்னர் வரும் 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில், நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், காரைக்கால், உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 29ஆம் தேதி 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கடலோரப் பகுதியில் காற்று வேகம் இருக்கும், புயல் காணப்படும் கடலோரப் பகுதிகளுக்கு மட்டும் சாதாரண கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும்.
அடுத்த ஐந்து நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கடலோரப் பகுதியில் காற்று வேகம் இருக்கும், புயல் காணப்படும் கடலோரப் பகுதிகளுக்கு மட்டும் சாதாரண கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும்.
அடுத்த ஐந்து நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடல், வடமேற்கு வங்கக் கடலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும்.
சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அடுத்த இரண்டு நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
அக்டோபர் 1 முதல் தற்போது வரை இரண்டு சென்டிமீட்டர் மழை அதிகம் பெய்துள்ளது.
புயலின்போது, காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும். காற்றின் வேகம் காரணமாக பாதிப்பு அதிகமாக காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக தான் வலுப்பெறும். ஒரு புயலின் ஆயுள்காலம் பத்து நாள்கள் மட்டும் தான். சென்னையில் புயலின் காரணமாக மழை பாதிப்பு குறைவாகதான் காணப்படுகிறது என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. சபரிமலை அன்னதான உணவில் அதிரடி மாற்றம்! புதிய மெனு என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.