பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

7 கி.மீ. வேகத்தில் நகரும் டிட்வா புயல்!

சென்னைக்கு தெற்கே 490 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

News image

7 கி.மீ. வேகத்தில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புயல்.

Updated On :28 நவம்பர் 2025, 3:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னைக்கு தெற்கே 490 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.

3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலில் வேகம் அதிகரித்து 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது.

தற்போது டிட்வா புயல் காரைக்காலுக்கு தென் கிழக்கில் 270 கி.மீ., புதுவைக்கு தென் கிழக்கில் 380 கி.மீ. தொலைவில் உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவ.30 காலை வரை புயலாக தீவிர தன்மையை தக்கவைத்து அன்று மதியத்துக்குள் கடலிலேயே வலுவிழக்கும்.

பின்னர் தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் சென்னைக்கு தென் மேற்கே வங்கக்கடலை அடையும் எனத் தெரிய வந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது.

இந்த புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Summary

Cyclone ditwah, centered 490 km south of Chennai, has begun to speed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.