சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-ல் “முல்லை” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது. அதேசமயம், "குறிஞ்சி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் II-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களும் (5.8 கி.மீ.), 39 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களும் (41.2 கி.மீ) அமைக்கப்படவுள்ளது. 5.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.
வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Downline) 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை 23.05.2025 அன்று தொடங்கி கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை (extremely low overburden), 3.8% செங்குத்தான சாய்வு (a steep gradient) மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் (IRR - Inner Ring Road) நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
மேலும் அதே நேரத்தில், "குறிஞ்சி" சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை 1060 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடினமான பாறைகள் (Grade-5&4 rocky strata) மற்றும் 230 மீட்டர் நீளத்திற்குச் கூர்மையான வளைவுகளையும் (Sharp Curve) கடந்து செல்லும்.
ஒரே மெட்ரோ நிலையத்தில் (கொளத்தூர் மெட்ரோ) ஒரே நேரத்தில் ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM-Kurinji) சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியிருப்பதும், மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM-Mullai) தனது பணியை முடித்து வெளியே வந்திருப்பதுமான (Breakthrough) இந்த இரட்டைச் செயல்முறை, நம் இந்திய நாட்டில் இதுவே முதல் முறை. இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் எம்.கார்த்திகேயன், Tata Projects நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கே.ரமேஷ், திட்ட மேலாளர் நத்தபோங் கட்கேவ், பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் டோனி பர்ச்செல், தலைமை பொறியாளர் உதயகுமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Tata Projects நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Summary
TBM “Mullai” Breakthrough at Kolathur Station and TBM "Kurunji" Begins Tunneling work from Kolathur Station to Srinivasa Nagar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மூலக்கடை பகுதியை வந்தடைந்த ‘சோ்வராயன்’! மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

மேல்விஷாரம் மேம்பாலத்தில் தாா் சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



