

புதுச்சேரியில் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி கடற்கரைக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
புதுச்சேரியில் டிட்வா புயல் வலுவிழந்தாலும் அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரவு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக தூரல் மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது விட்டுவிட்டு கன மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையையும் மீறி பொதுமக்கள் கடற்கரை நோக்கி வருகின்றனர். அவர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.