சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

News image
கோப்புப் படம்
Updated On :30 நவம்பர் 2025, 2:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,

சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றிரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைப்பொழிவு இருக்கக்கூடும்.

அதேபோல,

கடலூர்

மயிலாடுதுறை

நாகப்பட்டினம்

ராணிப்பேட்டை

திருவண்ணாமலை

வேலூர்

விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்றிரவு 10 மணி வரை லேசான மழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் வலுவிழந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Heavy rain likely in 11 districts until 10 pm!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.