ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

புயலால் பாதிக்கப்படுவோருக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

புயலால் பாதிக்கப்படுவோருக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

News image
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :30 நவம்பர் 2025, 12:30 am

தினமணி செய்திச் சேவை

டித்வா புயலால் பாதிக்கப்படுவோருக்கு அதிமுகவினா் உதவ வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், டித்வா புயல் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றபடி, உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புயலின் தீவிரம் உணா்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அதிமுகவினா் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிா்வாகிகள் களத்தில் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.