ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கக் கோரி சம்மன்.
கரூரில் மக்களிடையே பேசும் விஜய்
கரூரில் மக்களிடையே பேசும் விஜய்பிடிஐ
Published on
Updated on
1 min read

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் டிரோன் காட்சிகளை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கும் நிர்மல் குமாருக்கும் காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், விரிவான விசாரணைக்காக தவெகவினர் பதிவு செய்த விடியோவை காவல் துறையினர் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த அதிகப்படியான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா ஆகியோர் மீது காவல் துறை தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரசாரம் மேற்கொண்ட இடத்தில் நிர்வாக ரீதியாக இருந்த பிரச்னைகளை பட்டியலிட்டு தவெக தரப்பில் முன்வைக்கப்பட்டது. எனினும், இதனை விடியோ ஆதாரங்களுடன் தமிழக அரசு மறுத்தது.

இந்நிலையில், தவெக தரப்பில் பதிவு செய்யப்பட்ட பிரசார வாகனத்தின் சிசிடிவி காட்சிகள், டிரோன் காட்சிகள் போன்றவற்றை ஒப்படைக்கக் கோரி ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமாருக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க | விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

Summary

Police summons tvk Adhav Arjuna and Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com