
விபத்தை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்ய காவல்துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரத்தின் கூட்டத்தில் சிக்கி, 41 பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் சாலை வல நிகழ்ச்சிகளுக்கும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக கட்சியின் மீது கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்தது.
இதனிடையே, நாமக்கல்லில் இருந்து கரூருக்கு விஜய் செல்லும்போது, அவர் பயணித்த பிரசார வாகனம் மோதி, இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார். விபத்தை ஏற்படுத்திய பிரசார வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, அதனை பறிமுதல் செய்ய வேண்டாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், விஜய்யின் பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிரசார வாகனம், தற்போது பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் தலைமறைவு! இரு தனிப்படைகள் தேடல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.