ராமதாஸ், வைகோவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

ராமதாஸ், வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.
வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர்.
வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர்.
Published on
Updated on
1 min read

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸுக்கு, இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வைகோவின் உறவினரிடம் நலம் விசாரித்த முதல்வர்.
வைகோவின் உறவினரிடம் நலம் விசாரித்த முதல்வர்.

இதனிடையே, அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி, உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அன்புமணியால் ராமதாஸை நேரில் சந்திக்க முடியவில்லை.

அதேபோல, கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த வைகோ, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ராமதாஸ், வைகோ ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

Summary

Chief Minister Stalin met Ramadoss and Vaiko and inquired about their health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com