
திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை உத்தங்குடியில் திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆலோசனை கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர் சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் பரிசாக வழங்கப்படும். அதனையடுத்து இரண்டாம், மூன்றாம், நான்காம் சன்மானம் பரிசாக வழங்கப்படும்.
திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் மாவட்டம் மதுரை வடக்கு மாவட்டமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் திமுக மாநில மாநாடு, பொதுக்குழுவை நாம் சிறப்பாக நடத்தி இருக்கிறோம். மதுரையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த துணை முதல்வரிடம் அனுமதி கேட்டு இருக்கிறேன். நிச்சயமாக இளைஞரணி மாநில மாநாடு நடத்த துணை முதல்வர் அனுமதி அளிப்பார். அம்மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்துவோம்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்குத் திமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற திமுகவினர் கண்ணும், கருத்துமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.