கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை தொடக்கிவைத்தார்.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 42 நாடுகளைச் சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு இன்று காலை வருகைதந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இருந்து கொடிசியா மைதானம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடிசியா மைதானத்தில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கிவைத்து, முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் 100 -க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 750 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில், தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.