
காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோயில் நகைகளை ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்நாதனிடம் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்தில் கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பல மாற்று பொன் இனங்களை மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் விழா இன்று(அக். 12)நடைபெற்றது.
விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். எம்.பி. க. செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேஷ் ஐயர் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர். காந்தி, கோயில் நகை சரிபார்ப்பு குழு இணை ஆணையர் வான்மதி, இணை ஆணையர் பழனி ஆகியோர் உள்பட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 53 கிலோ 350 கிராம் எடையுள்ள பயன்பாட்டில் இல்லாத பல மாற்றுப் பொன்னினங்களை ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்நாதனிடம் ஒப்படைத்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளிட்ட கோயில் நகைகள் 53.350 கிராம் ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது
இந்த விழாவில் அறநிலையத்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் திமுக பிரமுகர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் சி குமாரதுறை, உதவி ஆணையர் கருணாநிதி, காமாட்சி அம்மன் கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.