சிறப்பு ரயில்கள்!
ரயில் (கோப்புப்படம்)

பெங்களூரு - தூத்துக்குடி, கொல்லத்துக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்!

தீபாவளியை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து கொல்லம் மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதைப் பற்றி...
Published on

தீபாவளியை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து கொல்லம் மற்றும் தூத்துக்குடிக்கு அக்.17, 18, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு, கேஎஸ்ஆா் பெங்களூரு நிலையத்தில் இருந்து அக்.17, 21 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06297) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06298) அக்.18, 22 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், எஸ்எம்விடி பெங்களூரில் இருந்து அக்.21-ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06567) மறுநாள் பிற்பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06568) அக்.22-இல் மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com