
இருமல் மருந்து விவகாரத்தில் பதிலளிக்க முதல்வருக்கு பொறுப்புள்ளது என்றும் இது குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும் எனவும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் உள்ளது. தவறு செய்த பிறகு தப்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்., பாஜக என பழி போடுவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும்.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சித்தாந்தத்தை விட்டு கூட்டணி சேரலாம். தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கும் விசிக, வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்துகிறது. கார் மீதான தாக்குதலுக்கு நான் காரணம் என திருமாவளவன் கூறுகிறர்; இதுதான் தமிழகத்திற்கான சாபக்கேடு.
சாதிகளுக்கு எதிரி எனக் கூறிக்கொண்டு சாதிப் பெயரில் அரசியல் செய்கிறது திமுக. இப்படிப்பட்ட தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
இருமல் மருந்து விவகாரத்தில் பதிலளிக்க முதல்வருக்கு பொறுப்பு உண்டு. ஆனால், இரு அதிகாரிகளை மற்றும் இடைநீக்கம் செய்துவிட்டு தனக்கு இதில் தொடர்பில்லை என அரசு மாயத்தோற்றத்தை அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.