தீபாவளி திருநாள்: 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

தீபாவளி திருநாளில் காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி
தீபாவளி திருநாள்: 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!
Published on
Updated on
1 min read

தீபாவளி திருநாளில் காலை, இரவு என இருவேளை சேர்த்து இரு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய நாளில் காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிக்கையில் தமிழக அரசு கூறியதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாஸ்மாக் விவகாரம்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Summary

Diwali: TN Govt allows 2 hours for crackers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com