சென்னை, போரூரில் ரூ. 2000 கோடி முதலீட்டில்
3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (அக். 15) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 5 ஆண்டுகளில், 2000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய ஃபார்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றானது, ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, போரூரில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய நாள், தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் 5 ஆண்டுகளில், ரூ. 2000 கோடி முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Summary
Agreement with Hitachi to provide employment to 3000 people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் செமிகண்டக்டா் துறையில் சா்வதேச நிறுவனங்கள் 330 கோடி டாலா் முதலீடு: மாநில அரசு ஒப்பந்தம்

என்எல்சி-தன்பாத் ஐஐடி டெக்ஸ்மின் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



