
தமிழ்நாட்டுக்குள் பாஜக அரசை காலூன்ற திமுக அனுமதிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரிமுனையில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ``இப்படியொரு அடிமைக் கூட்டத்தை, ஒன்றிய பாஜக அரசு தயார் செய்து தங்களின் அடிமைகளாகச் சேர்த்து வைத்துள்ளது. பழைய அடிமைகள் போதவில்லை என்று, இப்போது புதிய அடிமைகளையும் வலைவீசி தேடி வருகின்றனர். கண்டிப்பாக, புது அடிமைகள் ஒன்றிய பாஜக அரசிடம் மாட்டுவார்கள்.
எத்தனை அடிமைகள் ஒன்றுகூடி வந்தாலும், திமுக தொண்டர்கள் இருக்கும்வரையில் பாசிச அரசை தமிழ்நாட்டுக்குள் காலுன்ற அனுமதிக்க மாட்டார்கள். அடுத்த 5 மாதங்கள் மிகமிக முக்கியம்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: பேரவைக்கே சட்டம் இயற்றும் அதிகாரம் சொந்தம்: முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.