
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்தார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த தேர்தல்களில் இணைந்து போட்டியிட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேற்றிரவு ஒரு மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏற்கெனவே, பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை நேரில் சந்தித்து பைஜெயந்த் பாண்டா பேசியிருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாமகவில் பிளவு ஏற்பட்டு இரண்டு பிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் நீண்ட நேரம் அவருடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.